இந்தியாவின் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க வாராது வந்த மாமணி என்றார்கள். உலக அரங்கில் இந்தியா தனிமைப்பட்டிருக்கும் நிலை மாறும் என்றார்கள். இதை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிவேகத்தைக் கண்டு குரைப்ப வர்கள் என்றார்கள். வெறும் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கை காரணமாக மட்டுமே இதையும் எதிர்க்கிறார்கள் என்றார்கள். இந்தியாவைக் கட் டுப்படுத்துகிற விதி எதுவும் இல்லை என்றார்கள்.
123 எனப்படும் இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டை இடதுசாரி கட்சிகள் எதிர்த்தபோது, மத்திய ஆட்சியாளர்களாலும் அவர்களது பிரச்சார முகவர்களாலும் சொல்லப் பட்ட விமர்சனங்கள்தான் இவை. ஆனால் இன்று, இடதுசாரிகளின் எதிர்ப்பு எவ்வளவு அர்த்தமுள்ளது, எவ்வளவு சரியானது என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புக் குழுவின் சிறப்புக்கூட்டம் இம்மாதம் 24ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவா தித்து நிறைவேற்றுவதற்கான தீர்மான முன்வரை வை அமெரிக்காவின் பாரக் ஒபாமா அரசு தயா ரித்து, பாதுகாப்புக் குழுவின் உறுப்பு நாடுக ளுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றத்தால் இந்தியா தொடர்பான அணுகுமுறை மாறப் போவதில்லை என்று சுட்டிக்காட்டப்பட் டதை நிரூபிக்கிறது அந்த முன்வரைவு.
அணுஆயுத பரவல் தடை உடன்பாடு (என் பிடி), விரிவான அணு சோதனை தடை உடன் பாடு (சிடிபிடி) ஆகியவற்றில் கையெழுத் திடுமாறு இந்தியாவை பாதுகாப்புக்குழு கட்டாயப்படுத்த வேண்டும் என அந்த முன் வரைவு கூறுகிறது. அதுமட்டுமல்ல, இந்தியா தன்னிடம் உள்ள அணு ஆற்றல் மையங்கள் அனைத்தையுமே பன்னாட்டு அணு ஆய்வு முகமையின் ஆய்வுக்குத் திறந்து விட வேண் டும் என்று வற்பு றுத்த வேண்டும் என்றும் அந்த முன்வரைவில் அமெரிக்க அரசு கூறியுள்ளது.
அணு ஆயுதங்களை ஒழிப்பது என்ற ஒபாமா கொள்கைக்கு ஏற்ப இந்த முன் வரைவு தயாரிக் கப் பட்டிருப்பதாகக் கூறிக்கொள்ளப்படுகிறது. அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படுவது உலகத்திற்கு நல்லது தானே, அதற்கு ஒபாமா முயற்சி செய்வது பாராட்டுக்கு உரியதுதானே என்று மேலோட் டமாகத் தோன்றும். ஆனால், அமெரிக்கா அணு குண்டுகள் தயாரிக்கவோ, வெடிப்பு சோதனை கள் நடத்தவோ தடை விதிக்கும் ஏற்பாடு எது வும் என்பிடி, சிடிபிடி உடன்பாடுகளில் கிடை யாது. இதைப் புரிந்து கொண்டால், அணு ஆயு தங்களை ஒழிப்பதல்ல, மாறாக தான் மட்டுமே உலகை அச்சுறுத்தும் அணுகுண்டு தாதாவாக இருப்பதே அமெரிக்கா அரசின் நோக்கம் என் பது தெளிவாகும்.
இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்து வந்ததன் மூலம் இந்தியா தனது இறையாண்மை யையும் சுயமரியாதையையும் பாதுகாத்து வந் துள்ளது. அந்த இரண்டையும் இந்தியா கைவிட வேண்டும் என பாதுகாப்புக் குழு மூலம் அமெரிக்கா தற்போது நிர்பந்திக்கிறது.
இந்த நிபந்தனைகளுக்கு இந்தியா உடன்பட வில்லை என்றால், இந்தியாவுக்கு எந்த நாடும் அணு எரிபொருள் (யுரேனியம்) வழங்கக் கூடாது என்று முன்வரைவு கூறுகிறது. 123 உடன்பாட் டிற்காக அமெரிக்கா எந்தக் கெடுபிடியும் விதிக்க வில்லை என்ற வாதங்களை இது தவிடு பொடி யாக்குகிறது. குட்டக் குட்ட குனிந்து கொண்டே போவதை மன்மோகன்சிங் அரசு பெருமைக் குரியதாக நியாயப்படுத்தியது. இப்போது ஆப்ப சைத்த குரங்கின் கதையாகியிருக்கிறது. தன்னி டம் மறுபடியும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த மக்களுக்கு மன்மோகன் சிங் அரசு என்ன விளக்கம் தரப்போகிறது.
நன்றி.தீக்கதிர்
ஞாயிறு, 20 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக