-பேரா.ஆர்.சந்திரா |
செப்டம்பர் 19, 1893... முதன்முறை யாக பெண்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வாக்குரிமை பெற்றதினம். அதிகா ரப்பூர்வமாக, சட்டமியற்றி பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல்நாடு நியூசி லாந்து. கிளாஸ்கோ பிரபுவால் கையெழுத் திடப்பட்டு 19.9.1893ல் பெண்களுக்கு வாக்குரிமை உண்டு என்ற சட்டம் அம லுக்கு வந்தது. பெண்களின் இடம் வீடு தான் என்றும், பொதுவாழ்க்கை என்பது ஆண்களுக்கானது என்பதை எதிர்த்து, ஆயிரக்கணக்கில் படித்த, நடுத்தர வர்க்க பெண்கள் துவக்கிய வாக்குரிமை போராட் டம், அரசியல் மற்றும் சட்ட உரிமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பெரியார், பாரதியைப் போல்...! பல உலக நாடுகளில் பெண்களின் உரிமைகளுக்காக உரக்க குரலெழுப்பிய ஆண்கள் உண்டு. தமிழகத்தில் ஆண் களுக்கு சமமாக பெண்களும் பொது வாழ் வில் ஈடுபட வேண்டுமென பேசியதுடன் மட்டுமின்றி அரசியல் மேடைகளில் பெண்களை தலைமை தாங்க வைத்தவர் பெரியார். நியூசிலாந்தில் ஜான் ஹால், ஜூலியஸ் வோகே, ஜான் பாலன்ஸ் போன்ற ஆண் அரசியல்வாதிகள் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்றும், வாக்குரிமை அதற்கு முதற்படி என்றும் கூறி ஆதரவு அளித்தனர். 1878, 1879, 1887 ஆகிய ஆண்டுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கோரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அது நிறைவேற் றப்படவில்லை. 1885 முதல் வாக்குரிமை இயக்கம் வலுப்பெறத் துவங்கியது. கேட் ஷெப்பர்டு என்ற பெண்மணி 1891ல் வாக் குரிமை கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். 1891ல், 9000 கையெழுத்துக் களும், 1892ல் 20 ஆயிரம், 1893ல் 32 ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. மதுபான கடை அதிபர்களின் எதிர்ப்பு அலை! பெண்கள் வாக்குரிமை வலுப்பெறத் துவங்கிய போது, நியூசிலாந்தின் மிகப் பெரிய மதுபான உற்பத்தியாளர்கள், பார் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து மசோ தாவை முடக்கும் வேலைகளை ஹென்றி ஸ்மித் பிஷ் என்பவர் தலைமையில் செய்ய ஆரம்பித்தனர். 1891ல் முற்போக்கு சிந்தனை கொண்ட கட்சி ஆட்சிக்கு வந் தது. பெண்களுக்கு பேராதரவு அளித்த ஜான் பாலன்ஸ் 1893ல் மரணமடைந்தார். இருந்தும் போராட்டம் தீவிரமடைந்தது. 8.9.1893ல் மசோதா தாக்கல் செய்யப்பட் டது. அதை எதிர்த்து மதுபானக்கடை அதிபர்கள் மனு அளித்தனர். இறுதியில் அவர்களின் எதிர்ப்பை தாண்டி, 20 வாக்கு கள் ஆதரவாகவும், 18 வாக்குகள் எதிராக வும் பதிவாகி, மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. “பெண்கள், புதிய நம்பிக் கையுடன் பெண் விடுதலைக்காக இனி (19.9.1893) செயல்படுவார்கள்” என்று எழுதப்பட்டது. தெருக்களில் எல்லாம் உற்சாகம் பீறிட்டதை ‘க்ரைஸ்ட் சர்ச்’ பத்திரிகை வெளியிட்டது. சட்டமும் மாற்றமும் சட்டம் இயற்றப்பட்டவுடனேயே, பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. 1919ல் தான் நியூசிலாந்தில் பெண்கள் தேர்தலில் போட்டியிட முடிந்தது. 1933ல் தான் எலிசபெத் மெக்கோம் என்ற பெண் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூசி லாந்தில் நடைபெற்ற போராட்டத்தின் எதிரொலியை மற்ற நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் காணமுடிந்தது. சூசன் அண்டோனி என்ற பெண் தலைமையில் அரசியல் உரிமைகளுக்காக பெண்கள் போராடினர். சோஷலிச நாடுகள் பெண்களுக்கு அரசியலில் ஈடுபட ஊக்கமளித்தன. உல கின் முதல் பெண் அமைச்சர் அலெக் சாண்ட்ரா கோலன்தாய் முன் னாள் சோவியத் யூனியனில் 1919ல் சமூகநல கமிசா ராக பொறுப்பேற் றார். உலகின் 2வது பெண் காபினெட் அமைச்சர் டென் மார்க்கின் நினா பாங் (1924-26). உலகில் முதல் முறையாக மாநில கவர்னர் பொறுப்பை வகித்தவர் முன்னாள் சோவியத் குடியரசின் உக் ரைன் மாநில கவர்னர் எவ்கினியா போஷ் என்ற பெண் (1917-1918). இட ஒதுக்கீடும் பெண்களும் இன்று உலகிலேயே இடஒதுக்கீடு இல்லாமல், அதிக அளவில் பெண்கள் அரசியல் பொறுப்புகளை வகிப்பது கியூ பாவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 43.2 சதவிகிதம் பெண்கள் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் என பல மட்டங் களில் பொறுப்பு வகிக்கின்றனர். 2008ல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி (ஊநவேசந கடிச ளுடிஉயைட சுநளநயசஉா) உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் எடுத்துக் கொண்டால் கீழ் சபைகளில் 18.4 சதம், மேல் சபைகளில் 17.2 சதம் பெண்கள் நாடாளுமன்றங்களில் செயல்படுகின்ற னர். 1952ல் ஐ.நா. சபை பெண்களின் அர சியல் உரிமைகளை வலியுறுத்தி மாநாடு நடத்தியதும் பல நாடுகளில் உந்து சக்தி யாக அமைந்தது. 1979ல் பெண்கள் மீதான பாரபட்சங்களை நீக்கும் மாநாடும் (ஊநுனுஹறு), 1995ல் பெய்ஜிங் உலக மகளிர் மாநாடும் பெண்களை அரசியலில் ஈடு படுத்த வலியுறுத்தின. இந்தியாவிலும், பஞ்சாயத்துகளில் தற்போது 50 சதம் இட ஒதுக்கீடு என்பது நல்ல விஷயம். மிகுந்த வளர்ச்சி பெற்றதாக கருதப்படும் அமெ ரிக்காவில் மேல்சபையில் 77 பெண்க ளும், கீழ்சபை(செனட்)யில் 16 பெண்க ளும் உள்ளனர். 8 மாநில கவர்னர்கள் பெண்கள். உலகில் நாடாளுமன்றங்க ளில் பெண்கள் பங்கேற்பு எப்படி உள் ளது? முதல் 10 இடங்களை பிடிக்கும் நாடுகள். 1. ருவாண்டா - 56.3 ரூ 2. ஸ்வீடன் - 47.0 ரூ 3. கியூபா - 43.2 ரூ (இடஒதுக்கீடு இல்லாமலேயே) 4. பின்லாந்து - 41.5 ரூ 5. நெதர்லாந்து - 41.5 ரூ 6. அர்ஜென்டினா - 40.0 ரூ 7. டென்மார்க் - 38.0 ரூ 8. அங்கோலா - 37.3 ரூ 9. கோஸ்டாரிகா - 36.8 ரூ 10. ஸ்பெயின் - 36.3 ரூ பணக்கார, மேற்கத்திய நாடுகளில் அரசியல் தடம் பதிக்க பெரும் போராட் டத்தை பெண்கள் தொடர்கின்றனர். இந்தியாவில் மக்களவையில் 9.2 சதவிகிதமும், மேலவையில் 8.6 சதவிகித மும் பெண்கள். 32 கேபினட் மந்திரிகளில் 2 பேர் பெண்கள். மக்களவை சபாநாயகர் பெண். ஜனாதிபதி பெண். இருப்பினும் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு என்பது சாத் தியமில்லை என்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்தவே முடியாது. ஐ.நா. சபையின் 192 உறுப்பு நாடுக ளில் 8 நாடுகளில் மட்டுமே பெண்கள் பிரதமர்/அதிபராக உள்ளனர் என (ஜன வரி 2008) ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டு கிறது. கடந்த 13 ஆண்டுகளாக 33 சத விகித இடஒதுக்கீட்டிற்கு நாம் போராடி வருகிறோம். தொடரும் இப்போர் வெற்றி கிட்டும் வரை...! நன்றி:தீக்கதிர் |
ஞாயிறு, 20 செப்டம்பர், 2009
இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது...?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக