புதன், 9 செப்டம்பர், 2009

முற்போக்கு சமுதாய மாற்றங்களுக்கு கலை இலக்கியம் ஆயுதமே..!

இ.எம்.எஸ்.

``கலை இலக்கியத் துறையில் ஒரு படைப் பாளியின் குறிக்கோள்தான் என்ன? பொழுது போக்கை நல்குவதா, சமுதாய முன்னேற்றத்திற்கு உதவுவதா?’’

இந்தக் கேள்வி, படைப்பாளிகள் மத்தியில் மட்டுமல்ல, விமர்சகர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் கூட வெகுவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் விவாதிக்கப்படுகிறது. கலை இலக்கியங்களின் குறிக்கோள்களைப் பற்றி இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் ஒன்றுக்கொன்று போரிட் டுக் கொண்டு, முரண்பட்ட கண்ணோட் டங்களைக் கொள்கின்றன.

ஏதாவது, ஒரு முறையில் இந்தக் கேள்விக்கு விடையளிப்பது இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும். படைப் பிலக்கியமும் கலையும் மக்களுக்கான பொழுது போக்கை நல்குவது, சமூக முன்னேற்றத்திற்கான காரணங்களுக்கு உதவுவது ஆகிய இரண்டு அம்சங்களை யும் இணைக்கிறது. கலை இலக்கிய வளர்ச்சியில் இவை ஒவ்வொன்றின் பங்கைப் பற்றியும் சரியாகப் புரிந்து கொள்வதற்கு ஒரு படைப்பாளியின் அகநிலை விருப்பங்களையும், அவன் படைப்பு, சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகளையும் வேறுபடுத்திப் பார்ப் பது அவசியமானது.

தனியொருவனாக மனிதன் வளர்ந்து விடவில்லை. அவன், தான் பிறந்த சமுதாயத்தின் ஓர் அங்கத்தினனாகவே வளர்கிறான். அவனுடைய தனி குணாம் சங்கள் அனைத்தும் அவன் சார்ந்து நிற் கிற சமுதாயத்தின் சிருஷ்டிகள். இயற்கை யோடு உறவு வைத்துக் கொள்வதிலும், அடக்கியாள்வதிலும் மனிதன் பல நூற்றாண்டுகளாக வளர்ந்தும், முறை யாகத் தன் ஆற்றலைப் பெருக்கிக் கொண் டும் இருக்கிறான். இயற்கையின் மேல் சதா வளர்ந்து கொண்டிருக்கிற மனித னின் இந்த ஆதிக்கமே அவன் அறிவைக் கூர்மையாக்குவதோடு ரசனை உணர்ச் சிகளை மென்மையாக்கவும் செய்கிறது. மிகச் சிறந்த எழுத்தாளர்கள், இசைஞர் கள், ஓவியர்கள் போன்ற எவரும் தள பதிகள், தத்துவஞானிகள், விஞ்ஞானி கள், அரசியல்வாதிகள் கூட அந்தந்தக் கால கட்டத்தின், அந்தந்த தேசத்தின் சிருஷ்டிகளே ஆவர். எனவே ஒரு படைப் பாளியின் `` உள்ளத் துடிப்பு’’ என்பதெல் லாம் அந்தத் தனி நபரின் தனிச் சொத் தல்ல. மாறாக அது அவனை வளர்த் தெடுத்த சமுதாயத்தின் பொதுச் சொத் தின் ஒரு பகுதியே ஆகும்.

இதனாலேயே கலை இலக்கியத் துறையில் ஒரு படைப்பாளிக்குள்ள தத்துவத்தையும், சமுதாய வளர்ச்சியைச் சீராக்குவதில் தனி நபர் வகிக்கும் பாத் திரத்தையும் மறுப்பதாகக் கொள்ளக் கூடாது. பலர் சமுதாய மாற்றத்திற்கு அதிகமாகப் பங்கு வகிக்கின்றனர். வேறு சிலர் சமுதாய முன்னேற்றத்தைத் தடுப்பதற்காகவும், உத்வேகத்தைக் குறைப் பதற்காகவும் இருக்கிறார்கள்.

ஒரு சமுதாயத்தின் `` பொது உள்ளத் துடிப்பு’’ என்பது அச்சமூகத்தின் முற் போக்குக் சமுதாயமாற்றங்களையும் உள் ளடக்கிக் கொண்டது என்பதை இங்குக் குறிப்பிடுவது அவசியம். பிரபஞ்சத்தின் மற்றெல்லாவற்றையும் போல சமுதாய மும் ஒவ்வொரு கணமும் மாறிக் கொண் டேயிருக்கிறது. மாறிக் கொண்டிருக்கும் இயங்கியல் வரலாற்றில் பொருள் முதல்வாத வார்த்தைகளில் சொல்வதென் றால் மாறாதவை எவை? இயற்கை, சமு தாயம், எண்ணம் எல்லாமே சதா மாறிக் கொண்டே இருக்கின்றன. எனவே, கலை யிலும் இலக்கியத்திலும் ஒரு சமுதா யத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்துகிற ஒவ்வொரு படைப்பிலும் காணப்படும் சமுதாய மாற்றம் கோரும் உள்ளத் துடிப்பும் கூட, அந்த சமுதாயம் முழுமைக்குமுள்ள உள்ளத் துடிப்பின் பகுதியே ஆகும்.. ஆகவே எந்தவொரு கலை -இலக்கியம் படைப்பு பொது உள் உந்தலின் பகுதியே தவிர, வேறெந்த தனி உள் உந்தலும் இருக்க முடியாது.

உதாரணத்திற்கு கடந்த 40 ஆண்டு களில் எந்த இந்திய மொழியில் வேண்டு மானாலும் உள்ள கலை இலக்கிய படைப்பாளிகளைப் பாருங்கள். சமூக வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்பட் டுள்ளன. இன்னும் ஏற்பட்டுக் கொண்டி ருக்கின்றன. இந்த மாற்றங்களுக்கு தகுந்த வகையில் சிந்திக்கும் முறையிலும், கலை ரசனைகளிலும், ரசனை உணர்ச்சி களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின் றன. சிந்தையிலும், ரசனையிலும் ஏற்பட் டிருக்கிற இந்த மாற்றங்களை சரியாக எடுத்துச் சொல்லவும், தன் படைப்பு களில் பிரதிபலிக்கவும் முடி யாத எந்தப் படைப்பாளியை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும்? ஒரு சமுதாயத் தின் தேவையைப் புரிந்துகொண்டு அதைத்தன் கலை இலக்கிய படைப்பு களில் நயமாகச் சொல்வதை விடுத்து, மக்களிட மிருந்து தூர விலகிப் போகிற எந்தப் படைப்பாளியும் மக்களின் அங்கீ காரம் பெற முடியாமல் போவது சகஜம் தானே?

அகநிலையில் சமுதாயத்தில் பிற் போக்குக் கண்ணோட்டம் உள்ளவர்கள் இருந்த போதிலும், புற நிலையில், எந்த சமுதாயத்தை அந்தப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள் தாங்கிப் பிடித்தார் களோ, அந்தச் சமூதாயத்தின் முகத்தி ரையை விலக்கிக் காட்ட அவர்கள் படைப்பே உதவுகிறது.

திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் இந்த முரண்பாட்டிலிருந்து விடுபடவும், தங்களையறியாமலேயே உணர்வதை யெல்லாம் பிரக்ஞையோடு புரிந்து கொள்ளவும் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் சரியான பார்வை ஒன்று தான் உதவுகிறது. இதைப் புரிந்து கொண் டவுடன் அவர்களின் எழுத்துகள் முன்னி லும் வலிமைமிக்கதாகி, முற்போக்குச் சமூக மாற்றத்தைத் துரிதப்படுத்தும் நடவடிக்கையில் நேரடித் தொடர்பு கொள்கிறது. உண்மையில் இது தான் ஒரு பால்ஸாக்கிலிருந்தும், ஒரு டால்ஸ் டாயிலிருந்தும் ஒரு மாக்ஸிம் கார்க்கியை வேறுபடுத்திக் காட்டுகிறது.

-1975-செப்டம்பர் ‘ சிகரம்’ இதழிலிருந்து

நன்றி-தீக்கதிர்

கருத்துகள் இல்லை: