புதன், 28 அக்டோபர், 2009

காங்கியனூரும் கலைஞர் ஆட்சியும்

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்து வதே அரசு நிர்வாகம், காவல்துறை, ஆகியவற் றின் பிரதான நோக்கமாகும். ஆனால் தமிழ் நாட்டில் தலித் மக்கள் மற்றும் அவர்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகள் சம்பந்தப் பட்ட விஷயங்களில் சட்டத்தின் ஆட்சி என்ற பேச்சுக்கே அருகதையற்ற நிலைமை நீண்டகாலமாக நிலவிவருகிறது. தற்போதும் கலைஞர் ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், காங்கியனூர் கிராமத்தில் நடைபெற்ற சம்பவங்கள் இந்த உண்மையை மீண்டும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது. இக்கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட வர்கள் நீண்ட நெடுங்காலமாக அனுமதிக்கப் படுவதில்லை. தீமிதி திருவிழாவின் போது ஊரே களைகட்டியிருக்கும். கோயிலுக்குள் செல்லும் வழியிலேயே ஒவ்வொரு பக்த கோடியையும் ஜாதிய தணிக்கை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிப்பார்கள். ஒலிப் பெருக்கியில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே நுழையக்கூடாது என மீண்டும் மீண்டும் பகி ரங்க மிரட்டல் வெளியிடப்படும். தப்பித் தவறி இந்த கட்டுப்பாடுகளை மீறி உள்ளே தலித் துக்கள் யாராவது நுழைந்துவிட்டால், அவர் கள் கதி அதோகதிதான். இத்தனைக் கொடு மைகளும் காவல்துறையினருக்கு முன்பே அரங்கேற்றப்படும். ஆனால் அவர்கள் வாய் மூடி மௌனிகளாக இருப்பது வாடிக்கையாகும்.


வழக்கம் போலவே இந்த ஆண்டு ஆகஸ்ட் 7ந் தேதி தீமிதி திருவிழா நடை பெற்றது. மேற்கண்ட கட்டுக்காவல்களை மீறி தீமிதி குண்டத்திற்கு அருகே சென்று விட்ட குபேந்திரன், மணிகண்டன், செல்வி ஆகிய தாழ்த்தப்பட்டவர்கள் அடித்து உதைத்து விரட்டப்பட்டார்கள். செல்வியின் தலைமுடி யை பிடித்து இழுத்துவந்து வெளியே தள்ளி, பொங்கல் பானையை உடைத்து வீசி எறிந்துள்ளார்கள். வழக்கம் போலவே காவல் துறை வேடிக்கைப்பார்த்து நின்றுகொண்டி ருந்தது. தங்களது உறவினர்கள் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததை கண்ட மேட்டுச்சேரி, பள்ளச்சேரி கிராமங்களைச் சார்ந்த மக்கள், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் னரே விழித்துக் கொண்ட காவல்துறை, சாதி வெறிச் சக்தியினர் மீது ஒரு வழக்குப்பதிவு செய்தது. இதனை செய்த கையோடு, சாலை மறியல் செய்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் ஒரு வழக்கைப் பதிவு செய்து, தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக்கொண்டது. தனது பங்கிற்கு குற்றவியல் சட்டத்தின் 107வது பிரி வின் கீழ் வழக்கு பதிவு செய்தார் கோட்டாட்சியர்.

காவல்துறையின் இந்தபோக்கைக் கண் டித்தும், தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக் குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக்கள் அனுப் பியதுடன், 11.09.2009 அன்று திருக்கோவிலூ ரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அரசுத்தரப்பில் எந்த அசைவும் இல்லை. இந்நிலையில் செப்டம்பர் 30 அன்று தீண்டாமை பிரச்சனை மீது நேரடி நட வடிக்கையில் இறங்குவதென தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் திட்டமிடப் பட்டது. இதனையொட்டி காங்கியனூர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களோடு ஆலயப்பிரவேசம் செய்வதென தீர்மானிக்கப் பட்டு, மீண்டும் அனைத்து அதிகாரிகளுக் கும் முறையான மனுக்கள் அனுப்பி வைக் கப்பட்டன.

செப்டம்பர் 30 அன்று போராட்டத்திற்கு தலைமையேற்ற கே.பாலகிருஷ்ணன், ஜி.லதா எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் ஜி.ஆனந்தன் மற்றும் சிபிஎம் கட்சியின் தோழர் கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள், வாலிபர், மாதர், மாணவர் சங்கங்களின் முன்னணி தோழர்கள், டாக்டர் அம்பேத்கார் பேரவை மாநில தலைவர் சி. நிக்கோலஸ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், டாக்டர். அம் பேத்கார் நூற்றாண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.பி.சக்திவேல் உள்ளிட்ட பல தலித் அமைப்புகளை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு காங்கிய னூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஊருக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ் தலைமையில் ஏராளமான வாக னங்கள், படைப்பட்டாளத்துடன் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முகா மிட்டு சாலை மறியல் செய்து கொண்டிருந் தனர். ஊர்வலத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி `நீங்கள் இதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்கக் கூடாது. உங்களுக்கு அனு மதி மறுக்கப்பட்டுள்ளது. உங்கள் அனை வரையும் கைது செய்கிறோம்’ என்றார் காவல் துறைக் கண்காணிப்பாளர் திரு.அமல்ராஜ். போராட்டத்தலைவர்களான கே.பாலகிருஷ் ணன், சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தன் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோயி லுக்குள் சென்று வழிபடுகின்ற சட்டப்படி யான உரிமையை நீங்கள் நிலைநாட்ட வேண்டுமே தவிர, நீங்களே தடுப்பது என்ன நியாயம்? என சுமார் ஒன்றரை மணி நேரம் நமது நியாயங்களை எடுத்துக்கூறியும் காவல் துறை கண்காணிப்பாளரும், கோட் டாட்சியரும் கேட்கவில்லை.

சட்ட உரிமையை நிலைநாட்ட வேண் டிய அரசு நிர்வாகமே அதை செய்வதற்கு மாறாக தலித் மக்களின் உரிமைகளை நிரா கரிப்பதும், மேல்சாதி வெறிக்கு காவடித் தூக்குவதும் தான் உங்கள் நோக்கம் என்றால், நாங்கள் கலைந்து செல்ல முடியாது என போராட்டத் தலைவர்கள் உறுதியாக அறிவித் தார்கள். அவ்வளவுதான்! கண்காணிப்பாளர் உத்தரவிட, காவல்துறையும் அதிரடிப்படை யும் அப்பாவி ஆண்கள், பெண்கள் மீது கண் மூடித்தனமான தாக்குதல்களை தொடுத்தது. பலரது மண்டைகள் பிளக்கப்பட் டன. தலைவர்கள், பெண்கள், குழந்தைகள் யாரும் தப்பவில்லை. சாலையின் இருமருங்கி லும் முட்காடுகள், கரடுமுரடான வயல்வெளி கள் எனவும் பாராமல் காவல்துறையினரால் போராட்டத்திற்கு வந்தவர்கள் அடித்துவிரட் டப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா, காவல்துறையினரால் தாக்கப்பட்டு முள் செடிகளில் தூக்கி எறியப்பட்டதோடு, பூட்ஸ் காலால் அவரது அடிவயிற்றில் எட்டி உதைத் தனர். வலி தாங்கமுடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்தார். தலித் எம்.எல்.ஏ என் பதால் ஆதிக்க வெறியோடு காவல்துறை அவரை மூர்க்கத்தனமாக தாக்கியது.

சுமார் அரைமணி நேரம் தனது பேய் நர்த்த னத்தை நடத்தி அனைவரையும் விரட்டி அடித்துவிட்டு, போராட்டத் தலைவர்கள்

கே. பாலகிருஷ்ணன், ஜி.ஆனந்தன் ஆகி யோர் உட்பட 103 பேரை கைது செய்து, காவல்துறை யினரை தாக்கியதாகவும், வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் பொய் வழக்கு போட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக் கப்பட்டனர். 10 நாள் சிறை வாசத்துக்கு பின்னர் நிபந்தனை ஜாமீனில் அனைவரும் வெளியே வந்துள்ளனர்.

தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்ட ஜி.லதா, காவல்துறையினரால் கைது செய்யப் பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்த அடிப்படையில், அவர் மீதான வழக்கை விலக்கிவிட்டு மறைந்து விட்டது காவல்துறை. இப்போதும் அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடர்கிறது.

தனது பிறந்த மண்ணான திருவாரூரில் சாதி பேதமற்ற, சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் வரை நமக்கு ஓய்வில்லை என தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் முழங்கிக் கொண்டிருந்தார். அதே வேளையில்தான் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை, காங்கியனூரில் ஆலயப்பிரவேசத்திற்கு சென்றவர்களை அடித்து நொறுக்கிக் கொண் டிருந்தது. இதுதான் முதல்வர் அமைக்க நினைக்கும் சமத்துவ சமுதாயத்தின் லட் சணம் போலும்!

வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட தந் தை பெரியார் வழி வந்தவர்கள் என மார்தட்டி கொள்பவர்கள் ஆட்சியில், ஆலயத்தில் நுழைய முயன்றவர்களுக்கு சிறையா? என்ற கேள்வி எங்கும் எதிரொலித்தது. அதுவரை அசையாமல் இருந்த மாவட்ட நிர்வாகம் அதி ரடியாக செயல்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் தாழ்த் தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் அழைத் துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப் பட்டுள்ளது. தாமதமாக செய்யப்பட்டாலும் இது பாராட்டப்பட வேண்டியதே. போராட்டத் தின் போது மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளரிடம் நாம் கோரியதும் இதுதான். ஆனால் அவர் திட்டவட்டமாக மறுத்துவிட் டார். மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியால் செய்யமுடிந்த காரியம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் செய்யமுடியாதது அல்லவே! இருப்பினும் அவர் செய்ய மறுத்த மர்மம் என்ன என்பதே கேள்வி.

இத்தகைய போராட்டங்கள் நடைபெறும் போது மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் ஸ்தலத்திற்கு வருவது வழக்கமானது அல்ல. இங்கு கண்காணிப்பாளர் வந்தது மட் டுமின்றி, அவரே கதாநாயகனாக இருந்து அனைத்து தாக்குதல்களையும் முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட வர்கள் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்யப்பட்டு கட லூருக்கு வாகனங்களில் ஏற்றி அனுப்பப்பட் டது வரை, அதாவது நள்ளிரவு 1.30 மணிவரை கண்காணிப்பாளர், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தனது காரில் அமர்ந்து கடமையாற் றியது எங்கும் நடந்திராத அதிசயமாகும். சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் தலித் மக்கள் பிரச்சனைகளில் இவ்வாறு தான் கடமையாற்ற வேண்டுமென முதல்வர் ஆலோசனை வழங்கினார் போலும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவில் தான் கைது செய்யப்பட்டபோது ஊரையே கூட்டியவர் தான் இன்றைய முதல்வர். தன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்த்து நீதிகேட்ட அவரது ஆட்சியில் பட்டப்பகலில் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்று கூட பாராமல் ஜி.லதாவை போலீஸ் எட்டி உதைத்து பந்தாடியது குறித்து இதுவரை பேசாமல் இருப்பது ஏனோ? எடுத்ததற் கெல்லாம் அறிக்கை, கடிதம், கேள்வி - பதில் என அறிக்கை மழை பொழியும் முதல்வர், காங்கியனூரில் தலித் மக்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்ட தவறியது பற்றியும் ஆலயநுழைவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் இதுவரை மவுனம் சாதிப்பது ஏன்?

தனது ஆட்சியில் ஒரு பெண் எம்.எல்.ஏ தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருப்பதும், பொறுப்புவாய்ந்த கட்சியின் தலைவர்கள் தாக்கப்பட்டு சிறையிலடைக் கப்பட்டிருப்பது குறித்தும் பதில் சொல்ல வேண்டிய தார்மீக கடமை முதலமைச்ச ருக்கு இல்லையா? மூத்த அரசியல்வாதி யான தமிழக முதல்வரின் மேற்கண்ட மௌ னம் எதேச்சையானதல்ல. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு யார் குரல் கொடுத்தாலும் இதுதான் பரிசு என் பதை சொல்லாமல் சொல்வதே முதல்வரின் அழுத்தமான மௌனத்தின் அர்த்தமா?. தந்தை பெரியாரின் பெயரில் சமத்துவபுரங்கள், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நூற் றாண்டு விழா கொண்டாட்டங்கள் ஒருபக்கம், மறுபக்கம் அவர்களின் சமூகநீதி கொள்கைக்கு சமாதி என்பதே காங்கியனூரில் கலைஞர் அரசு அரங்கேற்றிய காட்சி.

கே.பாலகிருஷ்ணன்
நன்றி: தீக்கதிர்

கருத்துகள் இல்லை: