ஞாயிறு, 11 ஜனவரி, 2009

மறைக்க முடியாத மனித அவலம்

வள்ளிபுனத்தில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது சிறிலங்காப் படையினர் விமானத்தாக்குதல்களை நடாத்தி ஐம்பத்துமூன்று தமிழ் மாணவிகளை படுகொலை செய்த சம்பவம் நடைபெற்று ஒராண்டு ஆகிறது. இந்த ஒருவருட காலத்தில் இரண்டாயிரத்துக்கு அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்றும் நாள்தவறாது இந்த மனித அவலம் தொடர்ந்த வண்ணமிருக்கின்றது. சிறிலங்காவின் சட்டதிட்டங்களுக்கு புறம்பாக நடைபெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளின் பாத்திரவாளிகளாக சிறிலங்கா படைகளும் அவை சார்ந்த ஒட்டுக்குழுக்களும் இருக்கின்றன.
தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை பயங்கரவாத வன்முறை அல்லது சட்டவிரோதமான ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் வெளிப்பாடாகவே ஆதிக்க வல்லரசுகளும் அவை சாரந்த ஊடங்களும் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்விடயத்தில் புள்ளிவிபரங்களை வெளியிடும் அமைப்புக்கள்கூட அங்கு வெளிப்படும் அரசபயங்கரவாதத்தை அடையாளங ;காட்டுவதில்லை. இந்நாடுகளில் அரசியல் தஞ்சம்கோரும் தமிழர்கள் விடயத்திலும் சிறிலங்கா அரசு புரியும் மனிதவுரிமை மீறல்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. "உள்நாட்டு பயங்கரவாதத்தை" எதிர்கௌ;ளும் நாடு என்ற அனுதாபமும் சேர்ந்துவிடுகிறது. ஒருவகையில் இலங்கைத்தீவில் தொடரும் மனித அவலத்துக்கு இந்நாடுகளும் பொறுப்பாளிகளாக இருக்கின்றன என்றே கூறவேண்டும்.
இருப்பினும் சிறிலங்கா அரசின் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய உண்மை நிலை தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஜோன் ஹோல்ம்ஸ் அவர்களும், மூது}ரில் கொல்லப்பட்ட யுஉவழைn குயசஅ எனும் பிரஞ்சு உதவி நிறுவன ஊழியர்களான பதினேழு தமிழர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஐவெநசயெவழையெட ஊழஅஅளைளழைn ழக துரசளைவள (ஐஊது) என்ற அமைப்பும் வெளியிட்ட அறிக்கைகள் இவற்றை உறுதி செய்வனவாக உள்ளன.
தஞ்சங் கோரும் தமிழர் ஒருவர் விடயத்தில் அண்மையில் பிரித்தானிய நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் இந்நிலமை கவனத்தில் எடுத்துகொண்டுள்ளமை புலப்படுகிறது. இத்தீர்ப்பு தனியொருவர் சம்பந்தபட்டதாக இருந்தபோதும் தஞ்சங்கோரும் மற்றயவர்கள் விடயத்திலும் உதவக்கூடிய சாதகமான பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
சிறிலங்கா அரசுவிடயத்தில் மேற்கு நாடுகள் தமது அணுகுமுறையினை மாற்றும் நிலைப்பாடு தெரியாவிடினும், தீவின் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்துவதில் அயராது பணியாற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். உங்கள் பணி தொடரவேண்டும்.